செய்திகள்

கேரளாவுக்கு காரில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல்- 3 பேரிடம் விசாரணை

Published On 2018-10-20 11:02 GMT   |   Update On 2018-10-20 11:02 GMT
கேரளாவுக்கு காரில் கடத்திய 25 கிலோவுக்கும் மேல் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
கோவை:

கோவை மாநகர் தெற்கு சரக உதவி கமி‌ஷனர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் போத்தனூர் போலீசார் நேற்று நள்ளிரவு ஈச்சனாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்சீட்டில் சிறு, சிறு மூட்டைகள் கிடந்தன. இதுகுறித்து கேட்ட போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அது தடை செய்யப்பட்ட குட்கா என்பது தெரியவந்தது.

25 கிலோவுக்கும் மேல் குட்காவை கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த சுதிர் (33), அனஸ்(22), ஆலுவாவை சேர்ந்த சித்திக்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து இவற்றை வாங்கிச் செல்வதாக கூறி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குட்கா பிடிபட்டது குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம், கைப்பற்றப்பட்ட குட்கா மூட்டைகளை ஒப்படைத்து விடுவோம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேல்விசாரணை நடத்துவார்கள் என்றனர். #Gutka
Tags:    

Similar News