செய்திகள்

ஆவடி-புதூரில் வணிகர்களுடன் விக்கிரமராஜா ஆலோசனை

Published On 2018-10-13 14:46 IST   |   Update On 2018-10-13 14:46:00 IST
ஆவடி மற்றும் புதூரில் வணிகர்களுடன் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார். 23-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #vikramaraja #gst

சென்னை:

சில்லறை வணிகத்தில் அந்திய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி., பிளாஸ்டிக் தடை சட்டம் ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 23-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பு சங்கங்களின் தொகுதி கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் ஆவடியிலும், புதூரிலும் நடந்தது.

மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், மாவட்டச் செயலாளர் அம்பத்தூர் ஹாஜி கே.முகம்மது, மாநில துணைத் தலைவர் அய்யார் பவன் அய்யாத்துரை, ஆவடி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம். துரைராசன், ஆர்.வேலுச்சாமி, தங்கதுரை, மனோகரன், குருசாமி, திருமாறன், மாறன், முகமது ஷெரீப், மகாலிங்கம், பொன் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

உண்ணா விரதத்தில் மேற்கு மாவட்ட அடையாளமாக மஞ்சள் துண்டு அணிந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் மாவட்ட செயலாளர் ஹாஜி முகம்மது சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார். #vikramaraja #gst

Tags:    

Similar News