செய்திகள்

நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளியில் ஸ்மார்ட்கிளாஸ் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-10-05 05:36 GMT   |   Update On 2018-10-05 05:36 GMT
வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
கோபி:

கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதி நவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. இது புதுமையான திட்டம் ஆகும்.

இதன் மூலம் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கலாம். மாணவர்கள் பல்வேறு உலக செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.

கோப்புப்படம்

வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். மேலும் 9.11,12 ஆகிய அனைத்து வகுப்புகளும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

இந்த ஆண்டு முதல் பிளஸ்-2வில் 600 மதிப்பெண் எடுத்தாலே உயர் கல்விக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் உடனிருந்தார். #ADMK #TNMinister #Sengottaiyan #smartclass
Tags:    

Similar News