செய்திகள்

மழை எச்சரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Published On 2018-10-05 03:17 GMT   |   Update On 2018-10-05 03:17 GMT
2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TamilNaduWeatherman #Rain
சென்னை:

தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இதுகுறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7-ந் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 204.5 மி.மீட்டர் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால் அது கிழக்கு பகுதியில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதனால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தி மலைப்பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக இருக்கிறது. அது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்பதால் கேரளா, தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம்.

இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தேவை இல்லை. குறிப்பாக சென்னைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. எனவே 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduWeatherman #Rain
Tags:    

Similar News