செய்திகள்

ஓசூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-10-03 17:48 GMT   |   Update On 2018-10-03 17:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், கூட்டு ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரி அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். இந்த ஊர்வலம் ஓசூரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாகன பதிவு மற்றும் லைசென்ஸ் பெற போக்குவரத்து அலுவலத்திற்கு வந்தவர்களை, இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலுவலர்கள் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால், அரசு மானிய விலையில் மொபட் வாங்கிய பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் வாகன பதிவிற்கு வந்தபோது காத்திருக்க நேரிட்டது. இதன் காரணமாக அவர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், தனியார் கம்பெனிகளில் அனுமதி பெற்று வாகன பதிவிற்காக வந்த தொழிலாளர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
Tags:    

Similar News