செய்திகள்

வாலாஜா அருகே வாலிபர் அடித்து கொலை

Published On 2018-10-03 22:21 IST   |   Update On 2018-10-03 22:21:00 IST
வாலாஜா அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலாஜா:

ராணிப்பேட்டை பெல் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் இவரது மகன் அருண்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பொன்னாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளன. மர்மநபர்கள் அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அருண்குமாருக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யப்பட்டார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News