செய்திகள்

நெய்வேலியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை

Published On 2018-10-01 15:57 IST   |   Update On 2018-10-01 15:57:00 IST
நெய்வேலியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 48). இவர் நெய்வேலியை அடுத்த அசோக் நகர் பகுதியில் பாக்கு மட்டையில் பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கணேஷ் குமார் வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கடையின் உள்ளே கல்லா பெட்டியில் இருந்த ரூ.14 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

காலையில் கடைக்கு வந்த கணேஷ் குமார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நெய்வேலி டவுண்ஷிப் போலீசில் கணேஷ் குமார் புகார் செய்தார் அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றார்.

மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
Tags:    

Similar News