செய்திகள்

ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தது காங்கிரஸ் தான் - நிர்மலா சீதாராமன் பேட்டி

Published On 2018-09-29 13:52 IST   |   Update On 2018-09-29 13:52:00 IST
ரபேல் ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ் தான் என்றும், காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #RafaleDeal #NirmalaSitharaman
சென்னை:

சர்ஜிக்கல் ஸ்டிரைக் இரண்டாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-

2016ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் 4 முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தை மாற்றம் செய்தது காங்கிரஸ்தான். ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியிலும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.



சபரிமலை தீர்ப்பில் தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது, ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் தமிழக மீனவர்களுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பாதுகாப்பு  வழங்குகிறது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு மட்டுமே ராணுவ ஹெலிகாப்டரை வழங்கவில்லை, அவசர உதவி என யார் கேட்டாலும் உதவி வழங்கி வருகிறோம். சமீபத்தில் கூட மேற்குவங்கத்தில் உயிரிழந்த காங்கிரஸ் தலைவரின் உடலை கொண்டு செல்ல ராணுவ விமானத்தை வழங்கினோம். தற்போதுகூட இமாச்சலபிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #RafaleDeal #NirmalaSitharaman
Tags:    

Similar News