செய்திகள்

கல்பாக்கம் பகுதியில் கொள்ளை - 4 வாலிபர்கள் கைது

Published On 2018-09-28 13:05 IST   |   Update On 2018-09-28 13:05:00 IST
கல்பாக்கம் பகுதியில் பல வீடுகளில் கொள்ளையடித்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களில் பல வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிகளிலும் கொள்ளை நடந்தது. இதுகுறித்து அணுமின் நிலைய உயர் அதிகாரிகள் புகார் செய்தனர். இதை ஏற்ற காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தனிப்படை அமைத்தார்.

பள்ளிக்கரணை போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் துப்பு துலங்கியது.

இதில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சதீஷ் (22), சரத்குமார் (19), சரவணன் (21), விக்னேஷ்வர் (22) ஆகிய 4 பேரை பிடித்தனர். இவர்கள் கல்பாக்கம் அடுத்த கரியச்சேரி ரவி என்பவர் வீட்டில் கடந்த வாரம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை சதுரங்கபட்டினம் போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News