செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த கூலிதொழிலாளி ஜாமீனில் விடுதலை

Published On 2018-09-22 16:46 GMT   |   Update On 2018-09-22 16:46 GMT
நல்லம்பள்ளி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலிதொழிலாளி ஜாமீனில் விடுதலையானார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள அதியமான் கோட்டையில் இரண்டு மகன்களுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்தாம் வகுப்பு படிக்கும் சக்தி (15) என்ற மகனும், 6-வது வகுப்பு படிக்கும் வீரமணி (11) என்ற மகனும் உள்ளன. தனது 2 மகன்களுக்காக முனிராஜ் பல முறை சாதி சான்றிதழ் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகமும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னையிலும் பலமுறை மனு கொடுத்துள்ளார்.

மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மகன் சக்தி எழுதுவதால் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. 

அதனால் பல முறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் கிடைக்காததால் அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் அருகில் உள்ள 180 அடி செல்போன் கோபுரத்தில் ஏறி முனிராஜ் தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களை பார்த்து சத்தம் போட்டார். இது குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முனிராஜை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டு அதியமான் கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் முனிராஜிடம் விசாரணை நடத்தியதில் பல முறை தன் மகன்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகன்கள் மேற்படிப்பிற்கு தொடர முடியாதோ என்ற அச்சத்தில் மன முடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வருவாய்துறையினர் சாதிசான்றிதழ் தருவதாக உறுதி அளித்த பிறகு முனிராஜை காவல் துறையினர் இது போன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து வழக்குபதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
Tags:    

Similar News