செய்திகள்

புழல் ஜெயிலில் சோதனை நீடிப்பு - கைதிகளிடம் 4 செல்போன்கள் பறிமுதல்

Published On 2018-09-21 08:34 GMT   |   Update On 2018-09-21 08:34 GMT
புழல் ஜெயிலில் டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டதில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #PuzhalJail
செங்குன்றம்:

புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகின.

இதையடுத்து அங்கு நடந்த சோதனையில், நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்குள்ள கைதிகளுக்கு சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சில போலீசார் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் புழல் ஜெயிலில் டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். திடீரென சோதனை நடந்தது.

அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் முருகன், சந்திரன் ஆகியோரிடம் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் செல்போன்கள் இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், அதற்கான சிம்கார்டு, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்தார்.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அதை கொடுப்பது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #PuzhalJail

Tags:    

Similar News