செய்திகள்

சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலம் - இந்து முன்னணியினர் 40 பேர் கைது

Published On 2018-09-16 15:30 GMT   |   Update On 2018-09-16 15:30 GMT
சென்னையில் போலீசார் தடை செய்த பகுதியில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #VinayagarChathurthi
சென்னை :

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதைத்தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாள் வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதன்படி கோவில் மற்றும் வீட்டுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.

இந்நிலையில், சென்னையில் ஒரு சில பகுதிகள் வழியே விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து ஐஸ் அவுஸ் நோக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர்.  அவர்களில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News