செய்திகள்

திருவாரூர்-திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனுக்கு முடிவு ஏற்படும் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-09-16 10:12 GMT   |   Update On 2018-09-16 10:12 GMT
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு முடிவு ஏற்படும் என்று அண்ணா பிறந்த நாள்விழா பொதுகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #OPanneerselvam
பொன்னேரியில் நடந்த அண்ணா பிறந்த நாள்விழா பொதுகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சதியை முறியடித்து 27 ஆண்டுகாலம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்முத்திரை பதித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தான்.அ.தி. மு.க.வை இந்தியாவின் மூன்றா வது பெரிய கட்சி யாக உயர்த்திய பெருமை ஜெயலலிதாவை சேரும்.

காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றும் அரசாக அம்மாவின் அரசு உள்ளது.

அ.தி.மு.க. அரசு சட்ட போராட்டம் நடத்தி தான் காவிரியில் தன் உரிமையை நிலைநாட்டியது. டி.டி.வி. தினகரன் என்ன செய்வார் என எனக்கு தெரியும். அவர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்தவர். அவர்களது குடும்ப உறுப்பினர் 16 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்.


இப்போது ஆட்சியை கலைக்க தினகரன் வெறிகொண்டு பேசிவருகிறார். இருபது ரூபாய் நோட்டில் சீல் அடித்து பத்தாயிரம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி ஜெயித்தார்.

தற்போது மக்கள் பத்தாயிரத்தை கேட்டு தமிழகம் முழுவதும் 20 ரூபாய் நோட்டை யாரும் வாங்குவதில்லை. திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனுக்கு முடிவு வரும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா கட்சியை வழி நடத்தும்.

தெய்வீக சக்தி அ.தி.மு.க.வில் உள்ளது.கட்சியில் ஜனநாயகம் உள்ளது. எந்த சக்தியும் அ.தி.மு.க.வை மத்தியிலோ மாநிலத்திலோ ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #OPanneerselvam
Tags:    

Similar News