செய்திகள்

மெரினா கடற்கரையில் சிறுவர்களை அனுப்பி செல்போன் கொள்ளை- வாலிபர் கைது

Published On 2018-09-09 11:30 GMT   |   Update On 2018-09-09 11:30 GMT
மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தில் சிறுவர்களை அனுப்பி செல்போன் கொள்ளையடித்த 2 சிறுவர்கள் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். #merinabeach

சென்னை:

மெரினா கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள். அவர்களிடம் இருந்து அதிக அளவில் செல்போன்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்த 2 சிறுவர்களை பிடித்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “எங்களை அராபத் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன் திருடி வந்தால் பணம் தருவதாக கூறினார். அவரது ஆசை வார்த்தைக்கு மயங்கி செல்போன் கொள்ளையில் ஈடுபட்டோம்” என்றனர்.

இதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்த அராபத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #merinabeach

Tags:    

Similar News