செய்திகள்

பண்ருட்டியில் இளம் பெண் மாயம்- போலீசில் தாய் புகார்

Published On 2018-09-07 15:35 IST   |   Update On 2018-09-07 15:40:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம்பெண் மாயமானது குறித்து அவருடைய தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலாளி. இவரது மகள் காயத்திரி (வயது 14).

சம்பவத்தன்று இரவு ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்த அவர் தனது மகள் காயத்திரி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து காயத்திரியின் தாய் அஞ்சலை பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்.
Tags:    

Similar News