செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்- கிராமமக்கள் கோரிக்கை

Published On 2018-09-04 11:10 GMT   |   Update On 2018-09-04 11:10 GMT
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #sterlite #thoothukudiprotest
தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள் சுமார் 35-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்பாராத விதமாக பொய் பிரசாரங்கள், கேன்சர் மற்றும் பல நோய்களை இந்த ஆலை பரப்புகிறது என்று மக்களிடம் மூளைச்சலவை செய்து, ஆலையை தற்காலிகமாக மூடி நாட்டின் அமைதியை சீர்குலைத்து விட்டனர். இந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்து இருந்தனர். #sterlite #thoothukudiprotest
Tags:    

Similar News