செய்திகள்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் கோவில் சொத்தை கொள்ளையடிக்கிறது- எச்.ராஜா

Published On 2018-09-01 14:50 IST   |   Update On 2018-09-01 14:50:00 IST
தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். #BJP #HRaja
ராயபுரம்:

சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் இன்று அன்னதானம் நடந்தது.

இதனை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்து மதத்திற்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தவிர்க்க வேண்டும். மத ஊர்வலத்திற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.

உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தி என் தலைமையின்கீழ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடைப்பெறுகிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் கல்வி என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்லி தேர்தலை சந்திப்போம்.

மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை பொதுக்குழுவில் கடுமையாக சாடியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். பா.ஜனதா இதற்கு வெகுவிரைவில் பாடம் புகட்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். #BJP #HRaja
Tags:    

Similar News