செய்திகள்

கும்பகோணத்தில் பொதுப்பணித்துறையை கண்டித்து இந்திய கம்யூ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-28 16:33 IST   |   Update On 2018-08-28 16:33:00 IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி கண்டன உரையாற்றினார். மேட்டூர் அணை 3 முறை நிரம்பியும் கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கும்பகோணத்தில் 35-க்கு மேல் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் விடாததால் வறண்டு கிடக்கிறது.

இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழக அரசு கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 8 இடங்களில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் செய்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை மோசடி நடந்துள்ளது.

எனவே இதில் தொடர்புடைய பொதுப் பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தஞ்சை மாவட்டத்திற்கு குடிமராமத்து பணிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது அதில் கும்பகோணத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 8 பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஆனால் அதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #tamilnews
Tags:    

Similar News