செய்திகள்

69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2018-08-27 10:24 GMT   |   Update On 2018-08-27 10:24 GMT
மழை நின்றபோதிலும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து 69 அடியிலேயே நீடித்துவருகிறது.

கூடலூர்:

கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த வருடம் 142 அடி வரை தேக்கப்பட்டது.

பின்னர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீரால் வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

இதன் பின் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காகவும், 18-ம் கால்வாய் பாசனத்திற்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத போதும் வைகை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1800 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2206 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6914 மி.கன அடி.

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 2194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5571 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 117.09 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News