செய்திகள்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-25 11:41 GMT   |   Update On 2018-08-25 11:41 GMT
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் டாஸ்மாக் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் இடமாறுதல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் வாரிசுகளுக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி போன்ற துறைகளில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கண்ணையன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் செல்வக்குமார், செல்வராஜ், செந்தில்குமார், முத்துக்குமரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News