செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி மூலம் பயனடைந்த 415 குழந்தைகள்

Published On 2018-08-23 10:42 GMT   |   Update On 2018-08-23 10:42 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி மூலம் 415 குழந்தைகள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் அவசியமாகும். சில தாய்மார்களின் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைப்பதில்லை. இதனை தவிர்க்க அரசு சார்பில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இவ்வங்கி மூலம் பால் கொடுக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 165 தாய்மார்களிடம் இருந்து 19.5 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் பாலை பதப்படுத்தி குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல்லில் 415 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். தாய்ப்பால் இல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பாலை வங்கியில் பெறலாம். மேலும் தானமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்களும் இந்த வங்கியில் தொடர்பு கொள்ளலாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News