செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் சலுகை கட்டணம்

Published On 2018-08-22 10:42 GMT   |   Update On 2018-08-22 10:42 GMT
மாற்று திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் சலுகை கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழனி:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு பேருந்து பணிமனை முன்பாக தமிழக அரசின் 2010-ம் ஆண்டு உத்தரவை நிறைவேற்ற கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 4-ல் 1 பங்கு கட்டணத்தில் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை இடைநில்லா பேருந்துகளுக்கும் பொருந்தும். உள்ளூர் மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் இக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சுமை கட்டணம் வசூலிக்க கூடாது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற வேண்டும் என்று தெரிவிக்காமல் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் பயணம் செய்ய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிக்க வேண்டும்.

கட்டண சலுகையில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் கண்ணியாமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News