செய்திகள்

தேனி அருகே பெண் தர மறுத்தவரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2018-08-21 17:14 IST   |   Update On 2018-08-21 17:14:00 IST
தேனி அருகே பெண் தர மறுத்ததால் விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தேனி:

தேனி அருகில் உள்ள ஆதிப்பட்டியை சேர்ந்தவர் கருணைராஜன் (வயது44). இவரது தங்கையை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (34) என்பவருக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.

சில வாரங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே கருணைராஜன் தனது தங்கையை அவருக்கு திருமணம் செய்து தர முடியாது என கூறினார்.

ரஞ்சித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பலமுறை வற்புறுத்தியும் அவர் சம்மதிக்காததால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று கருணைராஜன் ஆதிப்பட்டி விநாயகர் கோவில் அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது ரஞ்சித்குமாரும், அவரது தந்தை ரத்தினசாமியும் வழிமறித்து அவரிடம் தகராறு செய்தனர். மேலும் தரக்குறைவாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து பழனி செட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News