செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள்

Published On 2018-08-17 12:27 GMT   |   Update On 2018-08-17 12:27 GMT
மதுரை மாநகராட்சி சார்பில் கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்களை ஆணையாளர் அனீஷ் சேகர் இன்று அனுப்பி வைத்தார். #KeralaFloods #KeralaRain
மதுரை:

மதுரை மாநகராட்சி சார்பில் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களாக 4660 கிலோ அரிசி, 800 கிலோ பருப்பு, 175 கிலோ கோதுமை, 839 சோப்புகள், 5240 நாப்கின்ஸ், 1704 பெட்சீட்கள், 1027 நைட்டீஸ், 1191 கைலிகள், 290 வேட்டிகள், 1336 துண்டுகள், 7810 மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள், 25 சில்வர் தட்டுகள், 30 சில்வர் பானைகள், 1 சாக்கு பொரிகடலை, 2 சாக்கு உப்பு, 2 சாக்கு புளி, 15 பண்டல் தலைவலி மருந்துகள், 5 தலையனைகள், 25 ஸ்வெட்டர்கள், 50 பாக்கெட் மாஸ்க்குகள், 4262 பாக்கெட் பிஸ்கட்ஸ் மற்றும் ரஸ்க் பொருட்கள், 3 பண்டல் மருந்து பொருட்கள் என 43 வகையான சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 2 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மதுரை மாநகராட்சியில் இருந்து 400 மூடைகள் கொண்ட 10 டன் பிளீச்சிங் பவுடர் 2 டிப்பர் லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மணி வண்ணன், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, நாராயணன், பிரேம்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #KeralaFloods #KeralaRain
Tags:    

Similar News