செய்திகள்

சிவகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2018-08-17 10:10 GMT   |   Update On 2018-08-17 10:10 GMT
சிவகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவகிரி:

ராயகிரி - வாசுதேவ நல்லூர் இடையே கூடநல்லூர் மலையின் மீது பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உண்டியலின் பணம் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று கோவிலை திறப்பதற்காக அர்ச்சகர் வந்தார். அப்போது கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் தங்கபாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறுத்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவிலின் வெளிப்புறம் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் அவசர கால ஒலி எழுப்பும் அலாரம் ஆகியவைகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. எனினும் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் உண்டியலில் இருந்து நிர்வாகம் சார்பாக பணம் எடுக்காததால் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News