செய்திகள்

ஜெயலலிதா மரணம் - எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

Published On 2018-08-16 17:15 IST   |   Update On 2018-08-16 17:15:00 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #Jayalalithaa
சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆஜராக விசாரணை கமிஷன் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News