செய்திகள்

மில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை

Published On 2018-08-13 17:10 GMT   |   Update On 2018-08-13 17:10 GMT
மில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேடசந்தூர்:

வேடசந்தூரில் பணிபுரியும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் சுமங்கலி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபடியான நேரங்களில் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். பல இடங்களில் இளம் பெண்கள் வேலைக்காக கடத்தப்பட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைக்காகவும், கட்டாய தொழிலாளியாகவும் மாற்றப்படும் நிலை உள்ளது. இவர்கள் பல சமயங்களில் பாலியல் அடிமைகளாக ஆளாக்கப்படுகின்றனர்.

நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் வெளி நாடுகளில் இருந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் நீதி கிடைத்து விடுகிறது. மேலும் தவறு செய்தவர்களின் சொத்துகளும் முடக்கப்படுகிறது.

எனவே இந்தியாவிலும் இது போன்று ஆள்கடத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களின் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை வழங்க சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News