செய்திகள்

ஆழ்வார்குறிச்சியில் வேன் டிரைவர் தற்கொலை

Published On 2018-08-11 19:28 IST   |   Update On 2018-08-11 19:28:00 IST
ஆழ்வார்குறிச்சியில் பெற்றோர் வேன் வாங்கி கொடுக்காததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ராவுத்தர்பேரியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது29). டிரைவர். இவர் தனக்கு சொந்தமாக வேன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். 

இதில் மனமுடைந்த தங்கராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News