செய்திகள்

களியக்காவிளையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர்- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

Published On 2018-08-10 16:28 GMT   |   Update On 2018-08-10 16:28 GMT
களியக்காவிளையில் இன்று கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
களியக்காவிளை:

களியக்காவிளையை அடுத்த மெதுகும்பல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்தள்ள அவர் இன்று காலை பொருட்கள் வாங்க களியக்காவிளைக்கு சென்றார். அங்குள்ள பஜாரில் ஒரு கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

இதற்கு கடையின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கடை வியாபாரியை மிரட்டினார்.

இதில் பயந்து போன வியாபாரி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் ராணுவ வீரரிடம் இருந்த கத்தியை பறிக்க முயன்றனர். அவர்களையும் ராணுவ வீரர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ராணுவ வீரரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை களியக்காவிளை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ராணுவ வீரரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News