செய்திகள்

ஈரோடு ஜவுளிக்கடை அதிபரை கடத்தி நகைபறிப்பு- கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2018-08-09 16:52 IST   |   Update On 2018-08-09 16:52:00 IST
ஈரோடு ஜவுளிக்கடை அதிபரை கடத்தி நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சித்தையன் (வயது 48). இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாஸ்திரி நகர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் சித்தையனை கடத்தி சென்றது.

சித்தையன் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தையும் 5 பவுன் நகையையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டது. அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த சித்தையன் இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்த நாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் (42) என் பவரை கைது செய்தனர். பின்னர் மதன்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதன்குமார் மீது ஏற்க னவே தாராபுரம், பழனி, திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மதன்குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவுப்படி மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். #tamilnews
Tags:    

Similar News