செய்திகள்

தொண்டி அருகே ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

Published On 2018-08-09 15:53 IST   |   Update On 2018-08-09 15:53:00 IST
தொண்டி அருகே பூட்டப்பட்டிருந்த மதுபான கடைக்குள் யாரோ புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றனர்.
திருவாடானை:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன தொண்டி பகுதியில் சமீபத்தில் மதுபானக்கடை திறக்க திட்டமிடப்பட்டது.

அந்தப்பகுதியில் நியாய விலைக்கடை, பெண்கள் குளிக்கும் ஊரணிகரை, பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு உறை விடப்பள்ளி இருந்ததால் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதனால் மதுபானக்கடை மூடப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேறு இடத்திற்கு கடையை மாற்ற முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடுபோன விவரம் தெரியவந்தது.

இது குறித்து கடை மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
Tags:    

Similar News