செய்திகள்

கருணாநிதி மரணம்: சிவகாசி தி.மு.க. தொண்டர் அதிர்ச்சியில் மரணம்

Published On 2018-08-08 12:35 IST   |   Update On 2018-08-08 12:35:00 IST
கருணாநிதி மரணமடைந்ததை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது51), பட்டாசு தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் இளம் வயது முதலே கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் சுப்பையா மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் கருணாநிதி மரணமடைந்ததை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த சுப்பையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

சுப்பையாவுக்கு ரூபி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். #karunanidhideath #dmk

Tags:    

Similar News