செய்திகள்
பலியான அருள்தாஸ், கைதான ரவிக்குமார்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தனியார் நிறுவன ஊழியர் கொலை- கைதானவர் வாக்குமூலம்

Published On 2018-08-07 10:27 GMT   |   Update On 2018-08-07 10:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (43). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

ஹெலன் ஜாஸ்மினின் சகோதரி பேபி கிறிஸ்டியா (46). இவரது கணவர் ரவிக்குமார் (50). டைலர். இவர்கள் தளி கும்பார தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேபி கிறிஸ்டியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று மாலை தளி கும்பார தெருவில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அந்த நேரம் ரவிக்குமார்-பிராங்கிளின் அருள்தாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய கல்லை தூக்கி பிராங்கிளின் அருள்தாஸ் தலை மீது போட்டார். இதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த தளி போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் ரவிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

தளி பி.டி.ஓ. அலுவலகத்தில் வேலை பார்த்த தேவநேசனின் மகள் பேபி கிறிஸ்டியா என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அவரது சகோதரி ஜாஸ்மினின் கணவர் பிராங்களின் அருள்தாசும், எனது மனைவி பேபி கிறிஸ்டியாவும் அடிக்கடி பேசி பழகி வந்ததாக தெரியவந்தது. இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து கேள்விப்பட்ட பிராங்களின் அருள்தாஸ் நேற்று எனது வீட்டிற்கு வந்தார். அவர் எனது மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழுமாறு என்னிடம் கூறினார்.

அப்போது நான், உன்னால் தான் எனது மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார் என்று கூறி தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். உடனே அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News