செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி திடீர் சந்திப்பு

Published On 2018-08-07 09:41 GMT   |   Update On 2018-08-07 09:41 GMT
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். #KarunanidhiHealth #MKStalin #StalilnMeetsCM
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த உடல்நல பிரச்சினைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.



கடந்த மாதம்  28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டதுடன், மூச்சுவிடவும் திணறினார். இதனால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை முதலில் தேறியது. நேற்று மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமானது. உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, மு.க. அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் முதலமைச்சரை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #KarunanidhiHealth #MKStalin #StalilnMeetsCM
Tags:    

Similar News