செய்திகள்
காவேரி மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் உஷார்

Published On 2018-08-07 13:13 IST   |   Update On 2018-08-07 13:13:00 IST
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். நேற்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் நிலைப்பற்றிய அறிக்கை வெளியானதும் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இரவு 10 மணிக்கு பிறகு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுஇருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #KarunanidhiHealth #Karunanidhi #KauveryHospital
Tags:    

Similar News