செய்திகள்
கலவை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கலவை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase
ஆற்காடு:
கலவை அடுத்த மேச்சேரி காந்திநகரை சேர்ந்தவர் எழிலரசன் (வயது40). இவரது மனைவி லட்சுமி (வயது36). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் எழிலரசன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதனால் விரக்கியடைந்த அவர் நேற்று வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கலவை போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.