வேலூர் சத்துவாச்சாரியில் பிரபல ரவுடி வசூர்ராஜா திடீர் கைது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் புதுவசூரை சேர்ந்தவர் வசூர் ராஜா (வயது 33). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட ரவுடி வசூர் ராஜா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ‘‘இனி எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன்.
குற்ற பின்னணி உள்ள நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள மாட்டேன். திருந்தி வாழப் போகிறேன்’’ என்று வசூர் ராஜா மனு கொடுத்தார்.
இந்நிலையில் புதுவசூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ரவுடி வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய்தனர். திருந்தி வாழ போவதாக மனு கொடுத்த வசூர்ராஜா, மணல் கொள்ளையில் ஈடுபடுள்ளார்.அலமேலுமங்காபுரம், புதுவசூர், பெருமுகை பகுதி பாலாற்றில் லாரிகளில் மணல் கடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட ரவுடி வசூர் ராஜாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.