செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2018-08-01 15:29 IST   |   Update On 2018-08-01 15:29:00 IST
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் அருள்ஜோதி(வயது 18). பெற்றோர் இறந்து விட்டதால் இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை அருள்ஜோதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அருள்ஜோதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அருள்ஜோதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News