செய்திகள்

கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2018-07-31 11:22 GMT   |   Update On 2018-07-31 11:22 GMT
கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன். இவர் முன்னாள் நகர்மன்ற கவுன்சலர் ஆவார். இவர் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்து புதுரோடு, எட்டயபுரம்சாலை, இளையரசனேந்தல் சாலை, அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் புதுரோடு மற்றும் எட்டயபுரம் சாலையில் உள்ள மரக்கன்றுகள் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தங்கப்ப நாடார் நந்தவனத்தைச் சேர்ந்த ஆட்டோடிரைவர் தாஸ் (வயது 50) என்பவர் மரக்கன்றுகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் அவரிடம் தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தாஸ், ராஜேந்திரனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தாசை கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News