செய்திகள்
கருணாநிதி உடல்நலக்குறைவு - ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பணி தீவிரம்
கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்டத்தில் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொற்று நோய் காரணமாக உடல்நிலை திடீர் பின்னடைவும் பிறகு தீவிர சிகிச்சையால் சீரான நிலையையும் அடைந்து வருகிறார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலும் நேற்றுமுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு நகரில் ரெயில்நிலையம், பஸ் நிலையம், மணிக்கூண்டு வீதி,கடைவீதி, கரூர் பைபாஸ் ரோடு (சோலார் கொல்லம்பாளையம், மூலப் பாளையம்) சூரம்பட்டி நால்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம், காவேரி மேம்பாலம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் இரவும்-பகலுமாக பாதுகாப்புபணியில் ஈடுட்டு வருகிறார்கள்.
ஈரோடு பஸ்நிலையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டமாக நின்று கொண்டு யாரும் பேசினால் கலைந்து போகும்படி சொல்கிறார்கள்.
இதேபோல் கோபி பஸ்நிலையம், கடைவீதி, மார்க்கெட், சத்தியமங்கலம் பஸ்நிலையம், மைசூர் ரோடு, தினசரி அங்காடி, புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர்,கவுந்தப்பாடி, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி உள்பட அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு கருணாநிதி உடல் திடீர் பின்னடைவு என்ற செய்தி பரவியதும் ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் என கடைகளும், ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. இதையொட்டி பரபரப்பு நிலவியது.