செய்திகள்

ஜெயலலிதா மரணம் - அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு

Published On 2018-07-29 14:31 GMT   |   Update On 2018-07-29 14:31 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம் ஜெ சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தது. #Jayalalithaa #ApolloHospital
சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை மேற்கொண்டது. இரவு 7 மணியளவில் தொடங்கிய ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன், அரவிந்தன் மற்றும் ஜெ.தீபா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #ApolloHospital
Tags:    

Similar News