செய்திகள்

மதுரையில் அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2018-07-28 08:30 GMT   |   Update On 2018-07-28 08:30 GMT
பஸ்சுக்காக காத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை:

மதுரை எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மகபூப்ஜான் (வயது 53). இவர் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் மகபூப்ஜான் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மகபூப்ஜான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை நகரில் நாள் தோறும் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். #tamilnews
Tags:    

Similar News