செய்திகள்
சேலம் அருகே வாலிபரை தாக்கியவர் கைது
சேலம் அருகே மாட்டின் வாலைப்பிடித்து திருக்கிய தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் உள்ள மூங்கில் குத்து முனியப்பன் கோவிலில் கடந்த 18-ந் தேதி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கோவில் அருகே மாடு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பிரதாப் (வயது 25) என்பவர் மாட்டின் வாலைப்பிடித்து திருகினர். இதைப்பார்த்த சிலர் பிரதாப்பை சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பிரதாப்பின் அண்ணன் குணசேகரன் கொண்டலாம் பட்டி போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக போலீசார் நெய்க் காரப்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து, குமார், செல்வராஜ், சுரேஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.