செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து 12 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-26 12:06 GMT   |   Update On 2018-07-26 12:06 GMT
தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:

பேரளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கோட்டூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.

நன்னிலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் வாஞ்சி தலைமை தாங்கினார். இதைபோல் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் சுதர்சனம் தலைமை தாங்கினார்.

திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரவேல் தலைமை தாங்கினார். கொரடாச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ், முத்துப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதைபோல திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் மாரியப்பன் தலைமையிலும், நீடாமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழ் ஆர்வன் தலைமையிலும், வலங்கைமான் தாலுக்கா அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் தங்கமுத்து தலைமையிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். #tamilnews
Tags:    

Similar News