செய்திகள்
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சாத்தான்குளம் அருகே குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு சிலுவை தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 2-வது மகன் சுரேஷ்(வயது20). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றினாராம். இதனால் சுரேசை பெருமாள் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுரேஷ் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.