செய்திகள்

ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பின - எடப்பாடி பழனிசாமி

Published On 2018-07-18 13:56 GMT   |   Update On 2018-07-18 13:56 GMT
எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’ என கூறியுள்ளார். #IncomeTaxRaid #EdappadiPalaniswami
கோவை:

தமிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு நிறுவனம் தனது வருமானத்திற்கு வரியை கட்டாமல் இருக்கும் போது வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. தமிழக அரசு டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஸ்டாலின் லண்டன் சென்றதும் நன்றாக மழை பெய்து தமிழக அணைகள் நிரம்பி விட்டன. அவர் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது. எனது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதாக கூறுகின்றீர்கள். எனக்கு தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 15 சதவிகித லாபத்துடன் டெண்டர் ஒதுக்கப்பட்டது. முட்டை டெண்டர் உரிய முறையில் ஒதுக்கப்படுகிறது. இதில், எந்த முறைகேடும் இல்லை. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News