செய்திகள்

கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி பெண்

Published On 2018-07-18 13:06 GMT   |   Update On 2018-07-18 13:06 GMT
கோவையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம்:

சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் வித்யா (30). எம்.ஏ. பட்டதாரி. இவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து வித்யா சென்னை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மணிகண்டன் கோவை சங்கனூர் வந்து விட்டார். இங்கு பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் வித்யா சென்னையில் இருந்து கோவை வந்தார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அவர் தன் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாலும் வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்தார்.பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற வித்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சினார். ஆனால் மணிகண்டன் மனம் இறங்கவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென மேட்டுப்பாளையம் சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரை மகளிர் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.நள்ளிரவு 1 மணி வரை வித்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் தர்ணாவை கைவிட்டு கோவையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். #tamilnews
Tags:    

Similar News