செய்திகள்

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2018-07-06 09:27 IST   |   Update On 2018-07-06 09:54:00 IST
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #chennaiDGPoffice #Bombthreat
சென்னை:

சென்னை கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளான். 

இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். டிஜிபி அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொடர்பு எண்ணை வைத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  #chennaiDGPoffice #Bombthreat
Tags:    

Similar News