செய்திகள்

சேலத்தில் லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2018-07-05 17:10 IST   |   Update On 2018-07-05 17:10:00 IST
சேலத்தில் மோட்டார் சைக்கிளும் லாரியும் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

சேலம்:

சேலம் பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்(வயது 20). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் வெங்கடேஷ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சேலத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தனர். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். 

நெய் காரப்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதியது. இதில் சதீஸ் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் வெங்கடேஷ் பலத்த காயம் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடேசை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பலியான சதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News