செய்திகள்

மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைக்கும் - நிர்மலா சீதாராமன்

Published On 2018-07-03 22:38 GMT   |   Update On 2018-07-03 22:38 GMT
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Mansarovar #NirmalaSitharaman
சென்னை:

மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை பாதுகாப்பு துறையும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  #Mansarovar #NirmalaSitharaman
Tags:    

Similar News